News November 19, 2024
விமான ஐடியா யாருடையது ? – ஆளுநர் சர்ச்சை பேச்சு

விமானம் குறித்த அடிப்படை தத்துவத்தை முதலில் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல, பரத்வாஜ் முனிவர் என உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி யுனிவர்சிட்டியின் 9வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பண்டைய இந்தியாவில் முனிவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துள்ளனர் எனக் கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 15, 2026
எங்கள் வேதனையை புரிந்து கொள்ள வேண்டும்: காங்.,

காங்.,க்கு ஏன் கூடுதல் தொகுதிகள் கொடுத்தீர்கள் என்று கூட்டணி கட்சிகள் கேட்டால் எப்படி என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால், முதலில் 110 தொகுதிகளில் காங்., நின்றது. பின்னர் அது 63 ஆனது. இதனையடுத்து 25, தற்போது 28 தொகுதிகளை ஏற்றது என்பது தமிழக மண்ணைக் காக்கவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்.. வெளியான புது பரபரப்பு

NDA கூட்டணியில் விஜய்யை <<19387664>>இணைப்பதற்கான <<>>பேச்சுவார்த்தை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாம். 80 தொகுதி, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் ஆஃபருக்கு தவெக 2-ம் கட்ட தலைவர்கள் சம்மதம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தவெகவின் KAS, ஆதவ் போன்றவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஓரிரு நாளில் கூட்டணி குறித்த முடிவு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News March 15, 2026
வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model: ஸ்டாலின்

வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model என பெயரெடுத்துள்ள மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பான தனது X தளப் பதிவில், தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, இந்நிலைமையை சீராக்க PM நடவடிக்கை எடுக்கவும் CM வலியுறுத்தியுள்ளார்.


