News November 19, 2024
இந்திய ராணுவத்துக்கு அதிக வீரர்களை அனுப்புவதில் வேலூர் மாவட்டம் 2-ம் இடம்

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. இதில் பேசிய கலெக்டர் சுப்புலட்சுமி இந்தியாவில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் அதனை கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
Similar News
News August 25, 2025
தாதிரெட்டிப்பள்ளி அருகே விபத்து

காட்பாடி தாலுகா மேல்பாடிைய அடுத்த தாதிரெட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மாலை இருசக்கர வாகனமும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில் வேலூர் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 25, 2025
வேலூரில் எந்த பதவியில் யார்?

▶️ கலெக்டர்- சுப்புலெட்சுமி
▶️ காவல் கண்காணிப்பாளர்- மயில்வாகனன்
▶️ வருவாய் அலுவலர்- மாலதி
▶️ மாநகராட்சி ஆணையர்- லட்சுமணன்
▶️ கலெக்டரின் நேர்முக உதவியாளர்- முத்தையன்
▶️ மேயர்- சுஜாதா
இதுபோன்ற தகவல்களை ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
வேலூரில் இரவு ரோந்து பணி விவரங்கள்

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, ஆறக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.