News November 19, 2024

திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் வெற்றி தான்: அமைச்சர் பேச்சு

image

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என். நேரு இன்று பேசியது, தமிழக முதல்வர் மீதும், இந்த ஆட்சி மீதும் குறை சொல்லி அடுத்து நாங்க தான் என எதிர் கட்சி தலைவர்கள், அதிமுகவினர் நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். இன்று யார்! யாரோ? நம்மை வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் எதுவுமே வெற்றி தான் என்றார்.

Similar News

News March 14, 2026

திருச்சி: NIT-யில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அமைந்துள்ள என்.ஐ.டி யில் கட்டடக்கலை, வேதியியல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பேராசிரியர், துணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள நபர்கள் www.nittrec.samarth.edu.in என்ற இணையதளம் மூலம், வரும் ஏப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

திருச்சி: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் வீரபாண்டி (75). இவர் லாரியில் தைலமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கையில் இருந்து மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவர் லாரியை திருப்ப முயன்ற போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்டு கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் கவிழ்ந்தன.

News March 14, 2026

திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!