News November 19, 2024
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி முதல் அழகர்மலை வரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளித்துள்ளது. எனவே தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
மதுரையில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வு செப். 28ல் நடக்கிறது. இத்தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்து வருகிறது, இந்த வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 20, 2025
மதுரையில் 2000 பேருக்கு வேலை உறுதி.!

மதுரையில் வரும் சனிக்கிழமை 23.8.25 அன்று மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊராக வளர்ச்சி துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 80 நிறுவனங்களிலிருந்து 2000க்கு மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம்.இந்த நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News August 20, 2025
மதுரை: மகால் பகுதியில் புற காவல் நிலையம் திறப்பு

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூய மரியன்னை பேராலயம் அருகே புதிதாக பொதுமக்களின் நலனுக்காக புற காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.