News November 19, 2024
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
Similar News
News March 24, 2026
காஞ்சி: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 24, 2026
காஞ்சி: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

காஞ்சிபுரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்
News March 24, 2026
காஞ்சிபுரம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

காஞ்சிபுரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


