News November 19, 2024

ஈரோட்டில் 40 பேர் மீது குண்டாஸ்

image

ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதுவரை சாராயம் காய்ச்சி விற்றதாக 5 பேர், கஞ்சாவிற்ற 9 பேர், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர், தொடர் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேர், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 9 பேர் என கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜவகர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News March 8, 2026

ஈரோடு: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

பெருந்துறையில் களமிறங்கும் இபிஎஸ்!

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இதுவரை 190 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி காஞ்சிகோவில் ரோட்டில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!