News November 19, 2024
முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

புதுவை வில்லியனூர் ஆரியபாளையம் மேரி பொனாண்டஸ், முன்னாள் ராணுவ வீரா். இவர் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். அவரது உறவினர் வீட்டை கண்காணித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
புதுவை: ஊரக வளர்ச்சி துறை சார்பில் நலத்திட்ட உதவி

புதுவை கோர்க்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
புதுவை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
புதுச்சேரி: பாஜகவில் இணைந்த 300-க்கும் மேற்பட்டோர்

மண்ணாடிப்பட்டு, பெரியபேட் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் முருகன், குப்பன் மற்றும் சாந்தப்பன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா பாஜக நிர்வாகி ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.


