News November 19, 2024

இராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

Similar News

News March 17, 2026

இராமநாதபுரம்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

கடம்பாகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தோட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு தனது மனைவியுடன் காரில் தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பாலு அவரது மனைவி இருவரும் நல்வாய்ப்பாக காயமுமின்றி தப்பினர்.

News March 17, 2026

இராமநாதபுரம்: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 17, 2026

இராமநாதபுரம்: வேனுக்கு அடியில் சிக்கி 4 வயது சிறுமி பலி

image

நாச்சியேந்தல் கிராமத்தில் தினமும் பள்ளிக்கு தனியார் வேன் மூலம் மாணவர்களை ஏற்றி செல்வது வழக்கம், அதேபோல் மாணவர்களை ஏற்றிச் செல்ல வந்த வேனின் முன்பு இளையராஜா மகள் கிரேசன்னா(4) விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்காத வேன் ஓட்டுனர் வேனை இயக்கியதால் வேனுக்கடியில் சிக்கிய 4 வயது குழந்தை பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுனர் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!