News November 19, 2024
புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.19 முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு முதல் நாளான இன்று இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.
Similar News
News November 19, 2024
இறந்த பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை!
திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை பாகனின் உறவினர் சிசுபாலன், நீண்டநேரம் தொட்டபடி செல்ஃபி எடுத்துள்ளார். புதிய நபர் தன்னை தொடுவதை விரும்பாத தெய்வானை, அவரை தாக்கியுள்ளது. அதை தடுக்க வந்த பாகனையும் தாக்கி இருக்கிறது. பின்னர், பாகனை தாக்கி விட்டோமே என்ற வேதனையில் அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் அவர் எழுந்திருக்காததால் கோபத்தில் மீண்டும் சிசுபாலனை தாக்கியதாக யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
News November 19, 2024
பொது அறிவு வினா – விடை
1) எல்நினோ என்பதன் தமிழாக்கம் என்ன? 2) RPU என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் எந்தாண்டு நிறைவேற்றப்பட்டது? 4) நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் கருவி எது? 5) எலியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘திரவிடத்தாய்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) புகையும் கந்தக அமிலம் எது? 8) சீன நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
News November 19, 2024
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று(நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.