News March 21, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் வைத்து விளம்பரம் வெளியிட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
கடலூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04142-293856 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 6, 2025
கடலூர்: ரூ.7 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்!

கடலூரில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நேற்று தனிப்பிரிவு போலீசார் சிதம்பரம்-சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் இருந்தது ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ 600 கிராம் எடை கொண்ட திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, ராஜசேகர் (28) என்பவரை கைது செய்துள்ளனர்.
News September 5, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

கடலூர் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <


