News November 19, 2024
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் லூசியானா மாகாணம் அல்மான்ஸ்டர் அவென்யூ பாலத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போன்று நியூ ஆர்லஸ் நகரில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 17, 2026
தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை: பவன் கல்யாண்

அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது; ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமல், வெளியே கொண்டு வரப்படாமல் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர், தமிழகத்திற்கு தற்போது தேவைப்படுவதும் இத்தகைய தலைமைதான் எனக் கூறிய அவர், அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் சரிவு!

தங்கம் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <


