News November 19, 2024

‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து, இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை சான்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் குறித்த தேதியில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி படம் வெளியாகும் என கங்கனா அறிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. வந்தது அறிவிப்பு

image

நாளை (மார்ச் 19) தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து, 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. அதாவது அடுத்த 4 நாள்களில் 3 நாள்கள் விடுமுறையாகும்.

News March 18, 2026

2 LPG கப்பல்கள் ஒரு நாளைக்கு மட்டும்தான்: ப.சிதம்பரம்

image

2 கப்பல்களில் இந்தியா வந்தடைந்த <<19380633>>LPG<<>> ஒன்றரை நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், போர் பதற்றத்திற்கு நடுவே ஹார்முஸ் நீரிணையை கடந்து 2 கப்பல்களும் 92,700 மெட்ரிக் டன் LPG-ஐ இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளன. இது நாட்டின் தற்போதைய தேவையில் 1.25 அல்லது 1.6 நாள்களுக்கு மட்டுமே போதுமானது என்று கூகுள் தரவுகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

News March 18, 2026

தூங்கிய மக்கள்.. இடமாற்றம் செய்த அரசு

image

கஜகஸ்தானின் கலாச்சி கிராம மக்களுக்கு 2013-ல் திடீரென பல நாள்கள் தூங்கும் விசித்திர நோய் பரவியது. மக்கள் எப்போது, ​​எப்படி தூங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல நாள்கள் தூங்கிக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் 2015-ல், மக்களை அக்கிராமத்திலிருந்து அரசு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தது. இதற்கான காரணம் குறித்து பல ஆய்வுகள் நடந்தாலும், தெளிவான விளக்கம் தற்போதுவரை கிடைக்கவில்லை.

error: Content is protected !!