News November 19, 2024
விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதுவே இந்தியாவின் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் என்றார். வரும் 25ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
Similar News
News March 18, 2026
வெள்ளி விலை ₹5,000 குறைந்தது!

<<19413476>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராம் ₹275-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2% குறைந்து 1 அவுன்ஸ்(28 கிராம்) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News March 18, 2026
வடகொரியா தேர்தல்: கிம்முக்கு எதிராக வாக்களித்த மக்கள்!

வடகொரியா நாடாளுமன்ற தேர்தலில், கிம் ஜாங் உன்னின் Workers Party of Korea கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 687 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணிக்கு 99.93% வாக்குகள் கிடைத்துள்ளது. இத்தேர்தலில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அனைத்து தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். மேலும், 1957-ல் இருந்து முதல் முறையாக 0.07% வாக்குகள் கிம் கட்சிக்கு எதிராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை!

TN முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் பலரும் விஜய் கட்சியின் பெயர், சின்னத்தை கூறும் காட்சிகள் SM-ல் வைரலாகி வருகின்றன. தேர்தல் நேரம் என்பதால், விஜய் பாடல்களை தவிர்க்க வேண்டும் என HM-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?


