News November 19, 2024
கூட்டுறவு வார விழா கண்காட்சியை தொடங்கி வைத்த துணை முதல்வர்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூட்டுறவு வார விழா’ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் – கூட்டுறவு சங்கம், கூட்டுறவு இணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் உடன் இருந்தார்.
Similar News
News March 12, 2026
ராயபுரம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 11, 2026
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
News March 11, 2026
சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


