News November 19, 2024
இரவு நேர ரோந்து பணி காவலர்களின் விவரம்

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஎஸ்பி ரகு தலைமையில் திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய உட்கோட்டங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது – மாரிசெல்வராஜ்

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
BIG BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; 7 பேர் கைது..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடம்போடுவாழ்வு மற்றும் பெரும்பத்து பகுதிகளில் நேற்று இரவு போதை கும்பல் நடத்திய அரிவாள் வீச்சில் இருவர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
News March 3, 2026
BREAKING: நாங்குநேரி போலீசாருடன் தள்ளுமுள்ளு…!

நெல்லை, நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிச் சாய்த்த கொடூரம். பெரும்பத்து கிராம மக்கள் ஒன்று கூடி, நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


