News November 18, 2024

GOOGLE MAP பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

GOOGLE MAP பயன்படுத்தி சபரிமலையில் இருந்து கர்நாடகா செல்ல முயன்ற பக்தர் ஒருவர் திண்டுக்கல்லில் ஆற்றுக்குள் சிக்கி சகதியில் 5 மணி நேரம் தவித்துள்ளார். அவரை போலீஸ் மீட்டது. GOOGLE MAP பயன்படுத்துகையில் குறிப்பிட்ட தூரத்திலேயே உண்மையான பாதையா என்பது தெரிந்து விடும். அதை அறியாமல் சென்றால் இதுபோல்தான் பிரச்னை வரும். அதனால் GOOGLE MAPஐ பயன்படுத்தும்போது விழிப்போடு இருப்பது நல்லது. SHARE IT

Similar News

News November 19, 2024

கூடைப்பந்து வீரர்களுக்கு மாதந்தோறும் ₹70,000 ஊதியம்

image

கிரிக்கெட்டைப்போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ₹70,000 ஊதியம் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பாணியில் விரைவில் கூடைப்பந்திற்கும் லீக் போட்டி நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், சென்னையில் முதல் முறையாக வரும் 22, 25ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News November 19, 2024

₹601-க்கு ஆண்டுதோறும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா

image

பிரீபெய்டு கஸ்டமர்களுக்காக ₹601 விலையில், 1 வருட Unlimited 5G data plan-ஐ ஜியோ அறிமுகம் செய்துள்ளது. 5G பிளானில் இல்லாதவர்கள், குறைந்த ரீசார்ஜ் (1.5GB or 2GB/month data) பிளானில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும். இந்த பிளானில் 12 மாதத்துக்கு 5G Voucher-கள் வழங்கப்படும். அதை Redeem செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானை வாங்கி ஜியோ பயன்படுத்தும் நண்பர்களுக்கும் பரிசளிக்க முடியும்.

News November 19, 2024

சபர்மதி படத்தை பாருங்க.. பாஜக வேண்டுகோள்

image

குஜராத் கலவரத்துக்கு காரணமாகக் கூறப்படும் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “சபர்மதி ரிப்போர்ட்” படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை டெல்லியில் பார்த்த பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, கோத்ரா ரயில் எரிப்பு குறித்து உண்மை அப்படியே படமாக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் காண வேண்டும், கரசேவகர்கள் எரிக்கப்பட்டதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.