News November 18, 2024
வங்கிகளில் கடன் வாங்கி பைக் வாங்க திட்டமா? இதை படிங்க

வங்கிக் கடன் வாங்கி சிலர் பைக் வாங்குவது குறித்து ஆலோசித்து வருவார்கள். அவர்களுக்காகவே இந்த செய்தி. வங்கிகள் பைக் லோனுக்கு 3 ஆண்டுகால வரம்பில் ரூ.1 லட்சம் லோன் அளித்தால் வசூலிக்கும் வட்டியை தெரிந்து கொள்ளலாம். *IDBI – 8.85% * இந்தியன் வங்கி – 10.15% * IOB – 11.00% *SBI- 13.30% * கனரா – 11.40% * சென்டிரல் வங்கி – 11.35% *HDFC – 14.50% * AXIS – 16.00% * யூனியன் வங்கி – 12.35% ஆகும்.
Similar News
News March 16, 2026
கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்ற ஆஃபருடன் அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக, அதிமுக, சசிகலா, ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. மேலும், யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 16, 2026
மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.
News March 16, 2026
புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.


