News November 18, 2024
வேலூர் யானை தந்தம் விற்க முயன்ற 5 பேர் கைது

வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்ய முயற்சிப்பதாக வேலூர் வனத்துறையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, பாஜக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரத்குமார் உட்பட 5 பேர் யானை தந்தம் வைத்து இருந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
வேலூர்: ஆட்சியர் இன்று கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்!

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் இன்று(மார்ச் 5) காலை 10 மணி அளவில் செல்ஃபி பாயின்டை கலெக்டர் சுப்புலட்சுமி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து 10:30 மணியளவில் காட்பாடி செங்குட்டை பகுதியில் ரிங் ரோடு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
வேலூர் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

வேலூர் மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). அணைகட்டு – 9489804674
2). குடியாத்தம் – 9865019786
3). கே.வி.குப்பம் – 9629015048
4). கணியம்பாடி – 7402602077
5). காட்பாடி – 9443098995
6). பேர்ணாம்பட்டு – 9442152420
7). வேலூர் – 9345278523
News March 5, 2026
வேலூரில் பம்பரமாக சுழலும் MLA!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. அந்த வகையில், அணைக்கட்டு MLA ஏ.பி.நந்தகுமார், தனது தொகுதியில் ஆய்வு செய்வது, பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவது, வாக்கு சேகரிப்பு என பம்பரமாக சுழன்று வருகிறார். ஏற்கனவே வேலூரில் விஜய் ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்றுள்ள நிலையில், மற்ற கட்சி நிர்வாகிகள் தங்களை காப்பாத்திக்கொள்ள துடிக்கின்றனர்.


