News November 18, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 22.11.2024 அன்று நாகர்கோவில் ஆட்சித்தலைவர் அலுவலக, நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அக்டோபர் மாதம் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் வழங்கப்படும். விவசாயிகள் இதில் கலந்துகொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News August 8, 2025

குமரி: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..குட் நியூஸ்!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (ஆக.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துளார். இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 8, 2025

கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

image

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

error: Content is protected !!