News November 18, 2024

நெல்லை விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் தீர்ப்பதற்கு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2024

கைபேசியை தவிர்க்க வேண்டும் – மாநகர காவல்துறை

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களுக்கு தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தவிர்க்க வேண்டும் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.

News November 19, 2024

மாவட்டத்தில் இன்று 7 மணி வரை செய்த மழை அளவு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று(நவ.18) பரவலாக மழை காணப்பட்டது குறிப்பாக சேரன்மகாதேவி பகுதியில் 9.40 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 4 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 3 மில்லி மீட்டர், களக்காடு பகுதியில் 6.20 மில்லி மீட்டர், கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 5.80 மில்லி மீட்டர், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லி மீட்டர் என மொத்தம் 55 இன்று காலை 7 மணி நிலவரப்படி 54.60மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 19, 2024

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு

image

திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06030) வரும் பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என நேற்று மாலை (நவ.18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.