News November 18, 2024
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தேர்தல் பரப்புரை நிறைவு!

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நவ.20 காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் 9.63 கோடி பேர் வாக்களிக்க வசதியாக 52,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 24, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 642 ▶குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ▶பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
News March 24, 2026
இந்தியா சவால்களுக்கு அஞ்சாது: PM மோடி

இந்தியா சவால்களுக்கு அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ளும் என்று PM மோடி கூறியுள்ளார். போரின் தாக்கம் உலகின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதாகவும், போர் சூழல்களை நாம் கையாளும் விதத்தையே உலக நாடுகள் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


