News November 18, 2024

திண்டுக்கல் பேராசிரியர் மீது நடவடிக்கை

image

திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக சுகாதாரத் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ரங்கநாதன் என்பவர் மாணவர்களை தவறாக வழி நடத்திய புகாரில் அவர் மீது இன்று கல்லூரி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரை ஆறு மாத விருப்ப ஓய்வு எடுக்க வேண்டுமென கல்லூரியின் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 14, 2026

திண்டுக்கல்லில் கொந்தளித்த நிர்வாகி!

image

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி.மகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

News March 14, 2026

திண்டுக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

பழனி வந்த பிரபல நடிகை!

image

பழனி மலை கோயிலுக்கு நடிகை அமலா பால் நேற்று பிற்பகல் வருகை தந்தார். மலை கோயிலுக்கு ரோப்கார் மூலம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப் பாதையில் இருந்து கீழே வந்தார். அப்போது பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

error: Content is protected !!