News November 18, 2024
நேதாஜி மரணம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி

நேதாஜி மரணம் குறித்து விசாரணை கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் (SC) தள்ளுபடி செய்தது. 1945இல் தைவானில் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை அவரின் ஆதரவாளர்கள் நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில், அவரின் மரணம் குறித்து விசாரணை கோரி தாக்கலான மனுவை விசாரித்த SC, அரசை நடத்துவது சுப்ரீம் காேர்டின் பணியில்லை. இதுகுறித்து உரிய மன்றத்தை மனுதாரர் அணுக வேண்டும் என ஆணையிட்டது.
Similar News
News March 20, 2026
வேட்புமனு.. ஒரு வாரம் கெடு விதித்த தவெக

தவெக வேட்புமனுக்கள் எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். அதன்படி, வேட்பாளர்களின் உறுதிமொழி பத்திரங்களை ஒரு வாரத்திற்குள் சட்ட வல்லுநர்களின் துணையோடு தயார் செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மா.செ.,க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். அவை தலைமை ஆய்வு செய்த பின்னரே இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
தவறு செய்துவிட்டேன்.. ஓபிஎஸ் வருத்தம்

வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியதுதான் என OPS வருத்தத்துடன் கூறியுள்ளார். தன்னை எப்படி கட்சியிலிருந்து நீக்கலாம் என்பதில்தான் EPS முழுமையாக செயல்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 9 பேரின் பதவி பறிப்பை தான் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட OPS, அந்த 9 பேரும் EPS உடன் சேர்ந்து தன்னை நீக்கியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

Volkswagen தனது கார்களுக்கான மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.


