News November 18, 2024
அமேசான் காடுகளுக்கு சென்ற US அதிபர்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக பிரேசில் சென்றுள்ளார். இதன்மூலம் அமேசான் மழைக்காட்டுக்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார். அங்கு பேசிய அவர், அமேசான் உலகத்தின் நுரையீரல். மனித குலத்தின் நன்மைக்காக, இதனை நாம் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News November 20, 2024
‘பலவீனமான அத்தியாயம்’: AR ரஹ்மான் உருக்கம்
ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருந்தோம். ஆனால், எதிர்பார்க்காத முடிவு வந்துள்ளது. உடைந்த இதயங்களின் எடையால், இறைவனின் அரியணையே நடுநடுங்கிவிடும். சிதறிய துண்டுகள் சேராது என்ற போதிலும், அர்த்தம் காண விழைகிறோம். பலவீனமான அத்தியாயத்தில் நடைபோடும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
அடுத்தடுத்து டைவர்ஸ்… எங்கே செல்கிறது சினிமாத்துறை!
கலாசாரத்தை சீர்கெடுப்பதில் சினிமாவுக்கு முக்கிய பங்கிருப்பதாக மக்கள் மத்தியில் பொதுவான கருத்து உண்டு. அதனை உறுதி செய்யும் வகையில், அத்துறையில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது, சினிமாத்துறை மீதான ஒவ்வாமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வாழ்வில் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழியேற்று இணையும் தம்பதியரால் ஒற்றுமையாக இருக்கவே முடியாதா?
News November 20, 2024
விளையாட்டு துளிகள்
➤புரோ கபடி தொடர்: 64வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 54-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ➤ஹாக்கி ஆசிய சாம்பியன்: இன்று நடைபெறும் ஃபைனலில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. ➤ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனை விஸ்மாயாவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ➤சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் INDவின் அனுபமா USAவின் பீவெனை வீழ்த்தினார்.