News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
அரியலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
ஜெயங்கொண்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.25ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 23, 2025
அரியலூர்: வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வருகிற 28ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இரண்டு சக்கர வாகனங்களும் ஏலம் விட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.