News November 18, 2024

ஈரோட்டில் யானை மிதித்து ஒருவர் பலி

image

கடம்பூர் மலை கிராமம், அணைக்கரை, பைரமர தொட்டியை சேர்ந்தவர் மாறன், வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. அதில் சோளம் விதைத்துள்ளார். இரவு சோளக்காட்டில் காவலுக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து கடம்பூர் எஸ்ஐ பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News

News August 16, 2025

புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

image

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 16, 2025

ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். ஈரோடு மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

ஈரோட்டில் இன்றுடன் நிறைவு பெறுகிறது

image

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா 13ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இன்று குதிரைச் சந்தை மற்றும் திருவிழா நிறைவு பெறுகிறது. குதிரைச்சந்தை, காங்கேயம் காளைகள், ஓங்கோல் இன பசு மாடுகள், கொங்கு காளைகள் போன்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாங்கி சென்றனர். குதிரைகள் பத்தாயிரம் முதல் 1 1/4 கோடி வரை விற்பனையானது. புகழ்பெற்ற குதிரை சந்தை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

error: Content is protected !!