News November 18, 2024

பாஜகவில் இணைகிறாரா கைலாஷ் கெலாட்?

image

ஆம் ஆத்மியில் இருந்து ராஜினாமா செய்த டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி உள்துறை அமைச்சராக இருந்த அவர், ஆம் ஆத்மி கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகினார். இதனையடுத்து ‘வாஷிங் மெஷின் பாஜக’ என்ற கோஷத்தை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

Similar News

News March 19, 2026

மெத்தனப்போக்கில் திமுக அரசு: அண்ணாமலை

image

<<19356260>>விளாத்திகுளம் கொடூரம் <<>>பற்றிய உண்மையை மக்களுக்கு CM ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தனது X பதிவில், கைதாகியுள்ள <<19424645>>தர்ம முனீஸ்வரன்<<>> ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளி என்றும், அவருக்கு SC-ல் ஜாமின் கிடைக்கும் அளவுக்கு திமுக அரசு வழக்கை மெத்தனமாக கையாண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியை TN போலீஸ் கண்காணிக்க தவறியதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 19, 2026

தமிழக தேர்தல்.. அதிரடியாக மாற்றம் செய்தது ECI

image

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றங்களை ECI அறிவித்துள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், போக்குவரத்து காவல், சிறைத்துறை, தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத் துறை ஊழியர்களும் இனி தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

News March 19, 2026

அண்ணன் சீர் சொந்த பணத்தில் கொடுங்கள்: சீமான்

image

நாதக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது விஜய்யை சீமான் விமர்சித்து பேசியுள்ளார். என் தம்பி அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ₹1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இப்பணத்தை எங்கிருந்து கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அண்ணன் சீர், மாமன் சீர் என அனைத்தையும் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1 பவுன் தங்கம், பட்டு சேலை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தை விஜய் வாக்குறுதியாக அளித்துள்ளார்.

error: Content is protected !!