News November 18, 2024

அர்ஜுன் சம்பத் அறிக்கைக்கு கண்டனம்

image

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஈசாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

கோவை: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>Fuel@Call<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!