News November 18, 2024
முதியோர் மாநிலமாக மாறும் அபாயம்: CM ஸ்டாலின்
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், வரிப் பகிர்வு விவகாரத்தில் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினர். இந்த நிலை நீடித்தால், முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு, முதியோர் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News November 20, 2024
விஷசாராயம்: போலீஸுக்கு ‘செக்’ வைத்த ஐகோர்ட்!
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். போலீசார் மீது தவறு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
News November 20, 2024
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனக்கு எதிரான சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் நிறுவனம் 2006இல் ஏர்செல் நிறுவனத்தில் ₹3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு அப்போதைய FM ப.சிதம்பரம் விதிகளை மீறி அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
News November 20, 2024
மகாராஷ்டிரா – ஜார்கண்ட் தேர்தல்: 11 மணி நிலவரம்
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.14% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2ஆம் கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 31.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. Follow Way2News, for recent election updates.