News November 18, 2024
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 49 விற்பனையாளர் பணியிடங்களுக்கு தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள 04146-229854 எண்ணிற்கு அழைக்கலாம்.
Similar News
News August 19, 2025
பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஆக.18) மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம், உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் தேவையான மருந்து இருப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடன் சுகாதார இயக்குனர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 19, 2025
அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றகை போராட்டம்

அத்தியூர் கிராம மக்கள், நேற்று(ஆக.18) காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். மனுவில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் தனி சுடுகாடும், பிற சமுகத்தினருக்கு ஒரு பொது சுடுகாடும் உள்ளது. பொது சுடுகாடு பகுதியில், பழங்குடி இருளர் மக்களுக்காக, அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டில் பட்டா வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.