News November 18, 2024

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் , யூனியன் கிளப் ஆகியவை இணைந்து குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

மயிலாடுதுறை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று மார்ச் 6 மற்றும் நாளை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை திருநள்ளாறு வழியாக நாகைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 11.20 மணிக்கு வருகை தரும். பின் திருநள்ளாறு காரைக்கால் வழியாக நாகைக்கு மதியம் 1.05க்கு செல்லும். மீண்டும் மதியம் 1:20க்கு நாகையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

மயிலாடுதுறை: தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கிய MLA

image

மயிலாடுதுறை மாவட்ட திமுக அவைத்தலைவர் K.G. சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு, தேர்தல் குறித்தும். தேர்தல் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். உடன் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!