News November 18, 2024

மானம் இல்லையா? என்ற தனுஷ்..உடைத்து பேசிய ராதிகா

image

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நயன்தாரா beyond the fairy tale ஆவணப்படத்தில் தனுஷ் குறித்து ராதிகா பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், வெட்கம் – மானம் இல்லையா? என தனுஷ் தன்னிடம் கேட்க, விஷயம் புரியாமல் தான் என்ன என வினவ, நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலிப்பதாக தனுஷ் கூறினார் எனக் குறிப்பிட்டார் ராதிகா. மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்தும் பல தகவல்களை பேசியுள்ளார் ராதிகா.

Similar News

News March 22, 2026

திண்டுக்கல்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

கொரோனாவை ஒழிக்க முதல் லாக்டவுன் வந்த நாள்!

image

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பின்னர், மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற் கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?

News March 22, 2026

ஸ்டாலினுடன் சமரசம் பேசும் ப.சிதம்பரம்

image

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசித்து வருகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளிடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஸ்டாலினுடன் ப.சி., சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!