News November 18, 2024
நாமக்கல் என பெயர் எப்படி வந்தது?
நாமகிரி என்ற பெயரில் இருந்து “நாமக்கல்” என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. மேலும், “நாமகிரி” என்று அழைக்கப்படுவது 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை ஆகும். இது நகரின் நடுவில் உள்ளது. இவ்வூருக்கு “அரைக்கல்” என்றும் பெயர் இருந்தது. “நாமகிரி” என்பதே பின் நாளில் “நாமக்கல்” என உருவானதாக கூறப்படுகிறது. நாமக்கல் மக்களே உங்க ஊருக்கு எப்படி பெயர் வந்ததை கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 19, 2024
வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
“துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை”
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
News November 19, 2024
அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள ஆய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.