News November 18, 2024
வேதாரண்யத்தில் 18.8 செ.மீ மழை பதிவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில் 15.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
Similar News
News November 20, 2024
10 நாட்களில் அண்ணாமலை ரிட்டன்ஸ்
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் லண்டனில் இருந்து காணொலி மூலம் பங்கேற்ற அண்ணாமலை, அதிமுக கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் சிலரின் கருத்துகளால் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். எனவே கூட்டணி தொடர்பாக யாரும் எவ்வித கருத்தும் கூறக்கூடாது என நிர்வாகிகளை அறிவுறுத்திய அவர், 10 நாள்களில் தமிழகம் திரும்பி, மீண்டும் கட்சிப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News November 20, 2024
மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிய ஜார்க்கண்ட்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக வசதிபடைத்த, முன்னேறிய மாநிலமான மகாராஷ்டிராவில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் பழங்குடியினரும், கிராமப்புற மக்களும் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்டில் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். 3 மணி நிலவரப்படி JH 61%, MH 45% பேர் வாக்களித்துள்ளனர்.
News November 20, 2024
மகாராஷ்டிராவில் 45.53%, ஜார்கண்டில் 61% வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் சற்றுமுன்பு வரை 45.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் 2ஆம் கட்டத் தேர்தலில் 61.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை வரை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த வாக்குகள் விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை EC வெளியிடும்.