News November 18, 2024
டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க நூதன Offer
டிரம்ப் ஆட்சி எவ்வாறு இருக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகள் தற்போதே அதிகமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அவரின் ஆட்சியில் இருந்து தப்பித்து கொள்ள, கப்பல் நிறுவனம் “வில்லா வி ஒடிஸி” 4 வருட உலக சுற்றுலாவை அறிவித்துள்ளது. இதற்கு ஒரு வருடத்திற்கு ரூ.33 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஆட்சியில் தப்பிக்கும் வகையில் வெளியாகியுள்ள அறிவிப்பு உலகெங்கிலும் கவனம் பெற்றுள்ளது.
Similar News
News November 20, 2024
BREAKING: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2024
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
News November 20, 2024
2 மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சி? WAY2NEWSஇல் EXIT POLL
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்குகள் குறித்த தகவலை வைத்து, யார் அங்கு அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்ற EXIT POLL விவரத்தை WAY2NEWS வெளியிடவுள்ளது. இதை தெரிந்து கொள்ள WAY2NEWSஇல் தொடர்ந்து இணைந்திருங்கள்.