News November 18, 2024
உதவித்தொகையுடன் ஆராய்ச்சி திட்டத்தில் சேர அழைப்பு

பாரதியார் பல்கலையின் உதவித்தொகையுடன் ஒன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறையில், ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர் மற்றும் கள உதவியாளராக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியான நபர்கள் வரும், 28ம் தேதிக்குள் அவர்களது சுயவிவர பட்டியலை, arulpragasan@buc.edu.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News March 5, 2026
எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டது. ஒரு மனு மேல் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


