News March 21, 2024
ஆப்கனை வெல்லுமா இந்தியா?

உலக கோப்பை (ஆசிய பிரிவு) கால்பந்து 2ஆவது கட்ட தகுதிச் சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சவுதி பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் இந்திய அணி (117), ஆப்கனை (158) வென்றால், உலக கோப்பை கால்பந்து மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு, முதல் முறையாக முன்னேறும். ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஆப்கனை வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 24, 2025
பொருளாதாரத்தில் பெரிய நாடு.. இந்தியாவுக்கு எந்த இடம்?

டாப் 10 பணக்கார நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவுக்கு எந்த இடம்? முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? என்பதை போட்டோஸ் மூலம் கண்டுபிடித்து கமெண்ட்ல சொல்லுங்க!
News October 24, 2025
லோகா OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவான லோகா திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஓடிடி ரிலீஸுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், அக்.31-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
அமெரிக்காவுக்கு இவ்வளவு கடனா… நம்ப மாட்டீங்க!

உலகின் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்கா தான், உலகிலேயே அதிக கடனாளி நாடு தெரியுமா? ஆம், அமெரிக்காவின் தேசிய கடன் தற்போது ₹3,339 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இது இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, UK ஆகிய நாடுகளின் மொத்த பொருளாதாரங்களின் அளவாகும். இதன்படி பார்த்தால், ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், சுமார் ₹1 கோடி கடன் உள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின், ₹175 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது.


