News March 21, 2024
அந்தியோதயா நெல்லையிலிருந்து இயக்கம்

நாகர்கோவிலில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை சிக்னல் பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அதன்படி இந்த ரயில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் நெல்லையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று (மார்ச் 20) இரவில் தெரிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
நெல்லை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர்

விகேபுரம் அருகே செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த பால்பாண்டி மனைவி அமுதா நேற்று முன்தினம் இரவு 10.30மணிக்கு வீட்டின் முன்பக்கத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பைக்கில் தப்பி சென்றனர். இதுக்குறித்து பால்பாண்டி விகே புரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
News November 7, 2025
நெல்லையில் ரயில் நிறுத்தும் நடைமேடை மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, சில முக்கிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் அனைத்தும் 5வது நடைமேடையில் நிறுத்தப்படும் என தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
News November 7, 2025
நெல்லை: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!


