News November 18, 2024
அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணமா?

நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கீர்த்தி சுரேஷ், அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பும் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் பிறகு அது வதந்தி என்பது தெரிந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தற்போது புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை கீர்த்தியின் தந்தை மறுத்துள்ளார்.
Similar News
News March 21, 2026
திமுகவுடன் கூட்டணி.. பிரேமலதாவுக்கு அதிர்ச்சி

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால், ‘பதவி விலகுவோம்’ என தேமுதிக மா.செ.,க்கள் போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது. சுதீஷுக்கு ராஜ்யசபா MP பதவி வழங்கிய திமுக, சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் (7 அ 8) தொகுதிகள் ஒதுக்கலாம் என பேச்சு எழுந்தது. இதற்கு எதிராக மா.செ.க்கள், போர்க்கொடி தூக்கியதால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா, அவர்களை சமாதானம் செய்கிறாராம்.
News March 21, 2026
19 ஆண்டுகள்.. உச்சம் தொடும் ‘கிங்’ கோலி!

2008-ம் ஆண்டு முதல் IPL-ல் விளையாடி வரும் கோலி அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர், அதிக சதங்கள் அடித்தவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். அதே நேரத்தில் தற்போது அவர் மற்றொரு சாதனையை நெருங்கி உள்ளார். இன்னும் 339 ரன்களை அடித்தால், IPL தொடரில் 9,000 ரன்களை விளாசப்போகும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை கோலி, 267 போட்டிகளில் விளையாடி 8,661 ரன்களை அடித்துள்ளார்.
News March 21, 2026
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இனி 8 மணிநேரப் பணி

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான 12 மணிநேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஹாஸ்பிடல்களில் தனி ஓய்வறை & கழிப்பறை வசதியை பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயிர்காக்கும் ஊழியர்களுக்கு 12 மணிநேர வேலைப்பளுவால் தூக்கமின்மை, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.


