News November 17, 2024
வேதாரண்யத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 18 செ.மீ. மற்றும் கோடியக்கரையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் இரவில் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நீரை விரைந்து வெளியேற்ற ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News November 19, 2024
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 19, 2024
நோபல் சாதனை படைத்த 4 மாத குழந்தை
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News November 19, 2024
கலைஞர் கடன் உதவி பெறலாம்
நாகை மாவட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு நிறுவனங்கள் கலைஞர் கடனுதவி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அல்லது தாய்கோ வங்கி கிளை மேலாளரை அணுகி 7 சதவிகித வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை கடன் மற்றும் மூலதன கடன்களை இத்திட்டத்தில் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.