News November 17, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Similar News
News March 6, 2026
ராணிப்பேட்டை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

ராணிப்பேட்டை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு க்ளிக் <
News March 6, 2026
தேர்தல் பணி தொடர்பாக முதற்கட்ட பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News March 6, 2026
ராணிப்பேட்டை: +2 தேர்வு நேரத்தில் நாட்டு வெடி வீச்சு

தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். இந்நிலையில் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட தகராறில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த மாணவர் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .


