News November 17, 2024

தஞ்சை அருகே கொள்ளை திட்டம் முறியடிப்பு

image

மருவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடுககுடி முனியாண்டார் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத ஏழு நபர்கள் ஆச்சனூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவையாறு வடுக்குடியை சேர்ந்த தினேஷ், ஆந்திராவை சேர்ந்த விக்கி, வீரமுத்து, மந்திரமூர்த்தி, அழகர், ராஜா, பழனிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 11, 2026

தஞ்சை: மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலி

image

கும்பகோணம் அருகே மருதாநல்லூரைச் சேர்ந்தவர் தமிழரசி (55). இவர் நேற்று பனை மட்டை எடுக்க சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியைத் தவறுதலாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் னழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 11, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 10, 2026

தஞ்சை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே க்ளிக் <<>>செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!