News November 17, 2024
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், இன்று (நவ.16) மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 225.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News September 15, 2025
திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News September 15, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.