News November 17, 2024
பீர் குடிப்பதால் நன்மைகளா… ஆச்சரிய ஆய்வுத் தகவல்

பீர் குடித்தால் உடல்நலக் <<14637555>>கேடுகள்<<>> ஏற்படும் என்பது தெரியும். ஆனால், அளவாக குடித்தால் சில நன்மைகளும் கிடைக்கும் என்கின்றன சில ஆய்வுகள். அளவாக பீர் அருந்துவது (அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆண்கள் 2 பீர், பெண்கள் 1 பீர்): *ரத்த சர்க்கரையை குறைக்கிறது *இதயநோய் ஆபத்தை குறைக்கிறது *சர்க்கரை நோய் ஆபத்தை 43% குறைக்கிறது *சிறுநீரகக் கல் ஆபத்தை 41% குறைக்கிறது *எலும்புகளையும், தசை நாண்களையும் வலுப்படுத்துகிறது.
Similar News
News March 16, 2026
ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
News March 16, 2026
விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சி நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அமமுகவின் திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் சு.சம்பந்தம் தவெகவில் இணைந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இது தேர்தல் நேரத்தில் TTV தினகரன் தரப்புக்கு பின்னடைவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
News March 16, 2026
ஐஸ்கிரீமில் Paracetamol Flavour-ஆ?

Paracetamol மாத்திரை தெரியும். ஆனா Paracetamol ஐஸ்கிரீம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? இதுதான் இன்னைக்கு வைரல் நியூஸ். நெதர்லாந்தில் Paracetamol ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. உடனே நெட்டிசன்கள், இதன் பயன் என்ன, டேஸ்ட் எப்படி என்று விசாரிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், உண்மையில் 2016-ம் ஆண்டு கார்னிவலில் காட்சிப்படுத்துவதற்காக பேக்கரி ஒன்று தயாரித்த ஐஸ்கிரீம் இது.


