News November 17, 2024

பயிர் காப்பீடு திட்டத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் பிரிமியம் செலுத்த கடைசி நாள் நவ.15 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார். காப்பீடு புதுப்பிக்காத அல்லது பதியாத விவசாயிகள் விரைந்து பதிவு செய்ய வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

BREAKING மானாமதுரை ஆகாஷ் உடலில் 28 காயங்கள்..!

image

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில், ஆகாஷ் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வலது கால் நடுப்பகுதி தசை, முழங்கை, முழங்கால், மூளை அடிப்பகுதியில் ரத்த கசிவு, நுரையீரல் வீக்கம் உட்பட 28 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்குதலில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

News March 13, 2026

சிவகங்கை: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 13, 2026

சிவகங்கை: அதிமுகவில் இணைந்த OPS அணியினர்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓபிஎஸ் அணியினை சேர்ந்த உதயனூர் பொன்னுதுரை, கல்லனி மோகன் ஆகியோர் ஏற்பாட்டில் பலர் இன்று சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் PR.செந்தில்நாதன் தலைமையில் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் K.M.கோபி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!