News November 17, 2024
Breaking: உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழக வீராங்கனை

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவரான காசிமா, மகளிர் தனிநபர் பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவரது தந்தை மெகபூப் பாஷா ஆட்டோ ஓட்டுநர் ஆவார். அமெரிக்காவில் இருந்து வரும் 21ஆம் தேதி காசிமா தாயகம் திரும்ப உள்ளார்.
Similar News
News March 23, 2026
பெட்ரோல் விலை லிட்டர் ₹398.. எங்கு தெரியுமா?

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தவகையில் இலங்கையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால், பெட்ரோல், டீசல் விலையை 25% உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ₹317-லிருந்து ₹398, டீசல் ₹79 உயர்ந்து ₹382 ஆக விற்பனையாகிறது. பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை விலை உயரவில்லை.
News March 23, 2026
வைகோவே நேரடியாக களத்தில் இறங்குகிறாரா?

மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அதில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. இந்நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடும் தொகுதியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தொகுதியில் வைகோவே போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
News March 23, 2026
சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.


