News November 17, 2024
திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் பணி நீக்கம்

கடந்த 2023 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் வினோத் என்பவர் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவலர் வினோத் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணி நீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்பி.ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
தஞ்சை: தொகுதி பங்கீடு ஒப்பந்தம் வெற்றி – முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்று, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் இன்று கலந்து கொள்ள உள்ளேன்’ என தெரிவித்தார்.
News March 5, 2026
தஞ்சை: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோர்ட் அதிரடி

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் (22) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News March 5, 2026
தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


