News March 21, 2024
திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர். சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 6, 2025
திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 6, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <