News November 17, 2024
முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டும் – காவல்துறை

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா ஆலோசனைப்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு மாநகர காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனங்களில் அளவுக்கு அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துள்ளனர்.
Similar News
News August 22, 2025
நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருது ஒரு லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும் இதற்கு awards:tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
நெல்லை வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

நெல்லை மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..