News November 17, 2024
மைசூர் பாக் பெயர் வர காரணம் தெரியுமா?

மைசூரை 1902 -1940 வரை ஆட்சி செய்த மகாராஜா 4ஆவது கிருஷ்ணராஜ உடையார் அரண்மனையில் மடப்பா என்ற தலைமை சமையல் கலைஞர் பணியாற்றினார். மன்னனுக்குப் புது இனிப்பை கொடுக்க நினைத்தவர் சர்க்கரை, கடலை மாவு, நெய், ஏலக்காயை சேர்த்து ஒரு இனிப்பை செய்தார். அதை சுவைத்த மன்னன் பெயர் என்னவென கேட்க, நளபாகம் என்றார் மடப்பா. இதனைக் கேட்டு, ராஜ்ஜியத்தின் பெயரையும் சேர்த்து ‘‘மைசூர் பாகு” என மன்னர் பெயர் சூட்டினார்.
Similar News
News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
News August 28, 2025
மேடையில் நடிகருக்கு மாரடைப்பு.. கவலைக்கிடம்!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ராஜேஷ் கேஷவ்விற்கு(47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பியூட்டிஃபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஹோட்டல் கலிஃபோர்னியா உள்ளிட்ட பல படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார்.
News August 28, 2025
வரலாற்றில் இன்று

*1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது
*1891 – திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்
*1965 – நடிகை டிஸ்கோ சாந்தி பிறந்த தினம்
*1982 – நடிகர் பிரசன்னா பிறந்த தினம்
*1983 – முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பிறந்த தினம்
*2020-காங்கிரஸ் மூத்த தலைவர் H.வசந்தகுமார் நினைவு தினம்